அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன்....மாஸ் காட்டும் இந்தியா!

 
IND

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி  நேற்று நடைபெற்றது இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 74 ரன்களும், ருத்ரான் கெய்க்வாட் 71 ரன்களும் எடுத்தனர். 

IND

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி தோல்வியுன் மூலம் இரண்டாவது இடத்திற்கு பின் தங்கிய நிலையில், இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.