இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ரூ.18 கோடிக்கு ஏலம்!
Nov 24, 2024, 17:33 IST1732449799623
2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. மார்க்யூ பிளேயர் எனப்படும் முக்கிய வீரர்களுக்கான முதல் சுற்றில் அதிகபட்சமாக ரிசப் பண்ட் 27 போன நிலையில் மார்க்யூ பிளேயரின் இரண்டாவது சுற்று தொடங்கியது.
இரண்டாவது சுற்றில் முதல் வீரராக வந்த முகமது சமியை 10 கோடிக்கு வாங்கியது ஹைதராபாத் அணி. அடுத்து வந்த டேவிட் மில்லரை 7.5 கோடிக்கு வாங்கியது லக்னோ. அடுத்து வந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாகலை 18 கோடிக்கு வாங்கியது பஞ்சாப். முகமது சிராஜை 12.25 கோடிக்கு வாங்கியது குஜராத் அணி. இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் லியாம் லிவிங்ஸ்டனை 8.75 கோடிக்கு வாங்கியது பெங்களூர் அணி. இந்திய பேட்ஸ்மேன் கே.எல் ராகுலை 14 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி.
இரண்டு சுற்றுகளின் முடிவில் சென்னை மற்றும் மும்பை அணிகள் ஒரு வீரரை கூட வாங்கவில்லை.