இந்தியா-ஆஸ்திரேலிய இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது!

 
IND

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சில நாட்களில் உலக கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒருநாள் தரவரிசை பட்டியலிலும் இந்த தொடர் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தால் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த தீவிரம் காட்டி வருகிறது. 

IND

ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய அணி இந்த தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடைசியாக தென் ஆப்ரிக்க அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2க்கு 3 என்ற கணக்கில் அந்த அணியிடம் தொடரை இழந்தது. ஆகையால் இந்த தொடரில் வெற்றி பெற்று உலக கோப்பைக்கு தயாராக ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.