ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதல்!

 
KKR

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று, 6ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இதேபோல் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்குமே இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஃப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.