புவனேஸ்குமாரின் அபார பந்துவீச்சு- ஹைதராபாத்துக்கு 166 ரன்கள் இலக்கு

 
ஐபிஎல்

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 57வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின. 

ஐபிஎல்

இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றிக்கு செல்லும் வாய்ப்புகள் குறைவு என்பதால் இந்த போட்டி எலிமினேட்டர் போட்டியாகவே பார்க்கப்பட்டது.

டாஸ் வென்ற  லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்காட்டக்காரர் டி காக் 2 ரன்களிலும் அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ஆமை வேகத்தில் ஆடிவந்த கேப்டன் கே.எல் ராகுல் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார்.12 ஓவர்களில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய லக்னோ அணியை நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஸ் பதோனி கூட்டணி சிறப்பாக ஆடி கரை சேர்த்தனர். பதோனி 30 பந்துகளில் 55 ரன்களடனும் , பூரன் 26 பந்துகளில் 48 ரன்களடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி தனது பேட்டிங்கை சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.