ரூ.27 கோடி... ரிஷப் பந்த்தை அலேக்கா தூக்கிய லக்னோ அணி
2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

மார்க்யூ பிளேயர் எனப்படும் முக்கிய வீரர்களுக்கான முதல் சுற்றில் முதல் வீரராக அர்ஷ்தீப் சிங் 18 கோடிக்கு பஞ்சாப் அணி ஆர்டிஎம் மூலம் தக்க வைத்தது. அடுத்து வந்த வேகபந்துவீச்சாளர் ககிஷோ ரபாடவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. மூன்றாவது வீரராக வந்த ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி.
இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை 15.75 கோடிக்கு குஜராத் டைட்டமன்ஸ் அணி வாங்கியது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை 11.75 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி. இறுதியாக வந்த இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரிசப் பண்டை 27 கோடிக்கு வந்தது லக்னோ அணி, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாறினார் ஸ்ரேயாஸ் ஐயர். முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்றுக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சற்று நேரத்தில் விடப்பட உள்ளது.


