இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் - அயர்லாந்து அணி அறிவிப்பு!

 
IRE

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் 2க்கு 01 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் ஒண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

ind vs ire

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் தொடரை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அயர்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ம் தேதியும், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 20ம் தேதியும்,  3வது டி20 போட்டி ஆகஸ்ட் 23ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக செயல்படவுள்ளார். 

அயர்லாந்து அணி : பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், பியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொர்காம், பென் ஒயிட், கிரேக் யங் உள்ளிட்டோர் அயர்லாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.