சாலையில் சறுக்கிய பைக்... ஷேன் வார்னேவுக்கு பலத்த அடி - நடந்தது என்ன?

 
ஷேன் வார்ன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் புகழ்பெற்ற வீரராக திகழ்ந்தவர் ஷேன் வார்ன். சுழற்பந்துவீச்சாளரன இவருக்கு வயது 52. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வார்ன், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். இச்சூழலில் இவர் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நேற்று தனது மகன் ஜாக்சனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்திருக்கிறார். இருவரும் தனித்தனி பைக்கில் சென்றுள்ளனர்.

Shane Warne takes tumble in motorbike accident and could have broken foot |  The West Australian

ஆனால் எதிர்பாராவிதமாக வார்னின் பைக் சாலையில் சறுக்கி விழுந்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 15 மீட்டர் தூரத்திற்கு அவர் சென்ற பைக் சறுக்கிக்கொண்டே சென்றதால், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டது. உடனே மருத்துவமனையில் அவரது மகன் ஜாக்சன் அனுமதித்தார்.  ஆனால் அந்தளவிற்கு பெரிய காயம் இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

Shane Warne Accident: बाइक चला रहे शेन वार्न का हुआ एक्सीडेंट, पैर और घुटने

தற்போது ஷேன் வார்ன் நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குப் பிறகு ஷேன் வார்ன் கூறுகையில், "நான் விபத்தில் சிக்கினேன். பெரியளவில் காயம் இல்லை. லேசாக காயம்பட்டதால் சிறு வலி இருந்தது. இருப்பினும் இப்போது கொஞ்சம் குணமாகிவிட்டேன்” என்றார். டிசம்பர் 8ஆம் தேதி ஆஷஸ் தொடர் தொடங்கவிருக்கிறது. அதில் வர்ணனை செய்ய ஆவலுடன் இருந்த ஷேன் வார்னேவுக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் கலந்துகொள்வாரா மாட்டாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.