பாரா துப்பாக்கிச் சுடும் உலக கோப்பை போட்டி: தங்க வேட்டையாடும் இந்திய வீரர்கள்..

 
பாரா துப்பாக்கிச்சூடு உலக கோப்பை போட்டி: தங்கம் வென்ற இந்திய வீரர்கள்.

பாரா துப்பாக்கிச் சுடும் உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள்  ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.  

2022 ஆம் ஆண்டு  பாரா துப்பாக்கிச் சூடும் உலக கோப்பை போட்டி, பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.  நேற்று நடைபெற்ற  பெண்கள் R2- 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ். ஹெச் 1 பிரிவில் பங்கேற்ற அவனி லெகரா,   250. 6 புள்ளிகள் பெற்று   தனது  சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்தார்.  முன்னதாக 249.6 என்கிற புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்த அவர், தற்போது அதனை மீண்டும் முறியடித்திருக்கிறார்.  இந்த சாதனை மூலம் அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவும்  தகுதி  பெற்றுள்ளார்.  

பாரா துப்பாக்கிச்சூடு உலக கோப்பை போட்டி: தங்கம் வென்ற இந்திய வீரர்கள்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீஹரி தேவராட்டி, கலப்பு 10 மீ ஏர் ரைபிள் எஸ்எச் 2 இறுதிப் போட்டியில் மொத்தம் 253.1 ஷாட்களுடன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.  அதேபோல் ந்   இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஆகியோர் பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிக்கான போட்டியில் 565 புள்ளிகளுடன்  தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.   இந்த ஜோடியும் முன்னதாக இருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இவர்கள் இறுதிப் போட்டியில்  சீனாவைச் சேர்ந்த யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறனர்.

பாரா துப்பாக்கிச்சூடு உலக கோப்பை போட்டி: தங்கம் வென்ற இந்திய வீரர்கள். 

பிரான்சின் சாட்ரூரோக்ஸில் நடந்து வரும் பாரா ஷூட்டிங் உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் அவனி லெகாரா, ஸ்ரீஹரி தேவராட்டி, கலப்பு அணி ஜோடியான ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஆகியோர்  இதுவரை  தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.  பாரா துப்பாக்கிச் சுடும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு 4 தங்கம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.