#IPL2024 மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்

 
#IPL2024 மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

#IPL2024 மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்

இரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ள நிலையில் உள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வி மற்றும் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் வெல்ல வேண்டும் என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி இரு அணிகளும் ப்ளே ஆஃப் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் இது ஒரு எலிமினேட்டர் போட்டியாகவே கருதப்படுகிறது.

Image

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் வந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் டூப்ளிசிஸ் 9 தன்னிலும் , அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஜத் படிதர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரஜத் படிதர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து 55 ரன்களில் வெளியேறினார். பத்து ஓவரில் பெங்களூர் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.விராட் கோலி 42 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.