ரோகித் சர்மா நீக்கமா ? - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம்

 
rahul dravid

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். 
  
ச்கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டியில் ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் இங்கிலாந்து சென்று பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுலும் காயம் காரணமாக விலகியுள்ளார். இதன் காரணமாக மயங் அகர்வால் கூடுதலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

rohit reaction

இதன் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோகித் சர்மாவை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இன்று மாலை அவருக்கு எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா விளையாட முடியாமல் போனால் பும்ரா இந்திய அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது.