அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அறிவிப்பு..

 
அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அறிவிப்பு.. அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அறிவிப்பு..


இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்து  கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்தவர் அமித் மிஸ்ரா. இவர் இந்திய அணிக்காக 22 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில்  76 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்கிறார். இதேபோல்  36 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அமித் மிஸ்ரா, அவற்றில் 64 விக்கெட்டுகளையும்,   10 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.  மேலும், 2003ம் ஆண்டு  வங்கதேசத்துக்கு  எதிரான ஒரு நாள்  முத்தரப்பு தொடரில் அறிமுகமான  அமித்,  2008ம் ஆண்டில் பஞ்சாபின் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்தியேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.  

அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அறிவிப்பு..

தொடர்ந்து 2013ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான  5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்  18 விக்கெட்டுகளை வீழ்த்தி,  ஜகவல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார். 2014ல் டி20 உலக கோப்பையில் விளையாடிய அவர், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.  கடைசியாக 2017ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய மிஸ்ரா,  அதன்பின்னர்  ஐபிஎல் போட்டிகளில் களமாடி வருகிறார்.  

 162 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். கடைசியாக ஐபிஎல்லில் லக்னோ அணிக்காக அவர் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் 25  வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகவும், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.