கேமராவில் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்படுகிறது! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோகித் சர்மா புகார்

 
rohit rohit

சமீபத்தில் தனது உரையாடல் வெளியானது தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயல் என கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.

Rohit Sharma's Smashing Reply When Asked By Coach Boucher "What's Next?" On  MI Future | Cricket News

இதுதொடர்பாக கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் ஊடுருவக்கூடியதாகிவிட்டது, கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் செயல்கள் கேமராவில் பதிவு செய்யப்படுவது வேதனை. பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகளின் போது உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறது.


நண்பர்கள் மற்றும் சக வீரர்களுடன் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற செயல்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும். எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ்- இடம் கேட்டுக் கொண்டேன். அதனை மீறி ஒளிபரப்பப்பட்டது. இது தனியுரிமையை மீறுவதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.