இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் - தென் ஆப்ரிக்க அணி திணறல்

 
test

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி திணறி வருகிறது. 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. இதுவரை டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், டி20 தொடர் சமனிலும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டியில்  தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

test

இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய அந்த அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணி 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தற்போது வரை அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட தென் ஆப்ரிக்க அணி 21 ரன்கள் பின் தங்கியுள்ளது.