"எங்க Rock வந்துட்டாருல" - பும்ரா என்ட்ரி; புகழ்ந்த கோலி... கேட்ச் செய்த ஸ்டம்ப் மைக்!

 
பும்ரா

தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் அபாரமாக சதமடித்திருந்தார். இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஃபிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைய வெறும் 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

கோலி

தென்னாப்பிரிக்கா சிறப்பாக பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே திணறியது. அதற்குக் காரணம் பும்ரா. கேப்டன் எல்கரை முதல் ஓவரின் 5ஆவது பந்திலேயே காலி செய்து பெவியலனுக்கு அனுப்பினார். அடுத்ததாக ஷமியும் பந்தை தெறிக்கவிட அடுத்தடுத்து வந்த வீரர்களும் வரிசையாக நடையைக் கட்டினார்கள். இச்சூழலில் ஆட்டத்தின் 11ஆவது ஓவரை பும்ரா வீசினார். அப்போது முதல் பந்தை வீசும்போது ஃபிட்ச்சில் கால் சறுக்கி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

Jasprit Bumrah suffers severe ankle injury, in danger of being ruled out of  Test series | The Indian Nation

வேறு வழியின்றி பும்ரா களத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறினார். அணியின் முன்னணி பந்துவீச்சாளரான பும்ரா போனது அணிக்கு தற்காலிக இழப்பாகவெ கேப்டன் கோலி கருதினார். ஏனெனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதாவது ஒரு மொமண்ட் கிடைத்துவிட்டால், ஆட்டத்தின் முடிவே மாறிவிடும். எனினும் கேப்டனுக்கு ஷமி பும்ராவின் ரோலை ஏற்றுக்கொண்டார். தாக்கூர், சிராஜ் இருவரும் அவருடன் கைகொடுக்க பேட்ஸ்மேன்கள் பரேடு நடத்தினர். 


8 விக்கெட்டை இழந்த பின், 60ஆவது ஓவரில் பும்ரா மீண்டும் களத்திற்கு வந்தார். வந்தவுடன் கடைசி விக்கெட்டையும் தூக்கினார். முன்னதாக களத்திற்கு அவர் பந்துவீச வரும்போது கேப்டன் விராட் கோலி, “எங்களுடைய ராக் பந்துவீச வந்துவிட்டார்” என்று கூறியுள்ளார். இது எப்படியோ ஸ்டம்ப் மைக்கில் பதிவாகிவிட்டது. இந்த வீடியோவையும் ஆடியோவையும் கட் பண்ணி எடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர். பும்ராவை WWE சூப்பர் ஸ்டார் தி ராக் உடன் கேப்டன் கோலி ஒப்பிட்டு பேசியது கொண்டாடப்படுகிறது.