ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் - சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

 
IND

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 6வது முறையாக அந்த அணி உலக கோப்பையை வென்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

suryakumar

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர் ), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.