ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப்-குஜராத் அணிகள் மோதல்

 
GT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 17 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 18வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்று இரவு மொஹாலி மைதானத்தில் நடைபெறவுள்ள 18வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நட்த்தவுள்ளன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒன்றில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி கொல்கத்தா அணியுடன் தோல்வி அடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதேபோல் பஞ்சாப் அணியை பொறுத்தவரையில், ஷிகர் தவான் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.