வெற்றிப் பயணத்தை தொடருமா சென்னை? - இன்று ஐதராபாத் அணியுடன் மோதல்!

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 29வது லீக் போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஏய்டன் மார்க்ராம் தலைமயிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றியும் (லக்னோ, மும்பை, பெங்களூருவுக்கு எதிராக), 2ல் தோல்வியும் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) அடைந்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 
 
இதேபோல் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2ல் வெற்றியும்(பஞ்சாப், கொல்கத்தா) 3ல் தோல்வியும்(ராஜஸ்தான், லக்னோ,மும்பை) அடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் சென்னையும், 5-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடைசியாக மோதிய அந்த அணிக்கு எதிரான 5 ஆட்டங்களில் 4-ல் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.