ஐபிஎல் கிரிக்கெட் - சென்னையை சமாளிக்குமா கொல்கத்தா?

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமயிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில்  4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 

இதேபோல் கொல்கத்தா அணியை பொறுத்தவரையில், இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளீல் 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத், மும்பை. டெல்லி அணிகளிடம்)  அடைந்துள்ளது. அந்த அணி தனது முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. ஆதிக்கத்தை தொடர சென்னை அணியும், சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.