முதல் வெற்றி யாருக்கு? - இன்றைய லீக் போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் மோதல்

 
MI

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 16வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள அருஜ் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணியை பொறுத்தவரையில் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் இரண்டிலையுமே தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்தய இடமான 9வது இடத்தில் உள்ளது.

இதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரையில் அந்த அணி இந்த சீசன் தொடக்கமே சீசனாக அமைந்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் மூன்றிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத நிலையில், இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பெற இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.