ஐபிஎல் கிரிக்கெட் தொடர் - குஜராத்தை சமாளிக்குமா டெல்லி?

 
GT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டி, வருகிற 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  குஜராத் அணியை பொறுத்தவரையில் இந்த சீசனிலும் வலுவான நிலையில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 

இதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரையில் இந்த சீசன் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விபத்தால் காயமடைந்ததால் அவர் தொடரில் இருந்து விலகினார். இதனால் வார்னர் தலைமையில் அந்த அணி செயல்பட்டு வருகிறது. இதுவரை டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் 2 மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.