வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? - ஐதராபாத்-லக்னோ அணிகள் இன்று மோதல்

 
LSG

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 9 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 10வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் ஏய்டன் மார்க்ராம் தலைமையிலான  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 2 லீக் போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதேபோல் ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் அந்த அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதியது. அந்த போட்டியில் ஐதராபாத் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப் பயணத்தை தொடங்க தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுறது. இந்த போட்டி லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.