இந்திய கிரிக்கெட் அணிக்கு Kit ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா கிடிக்கெட் அணிகளுக்கு இடையே நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் மோத இருக்கின்றன.
இந்தப் போட்டிகளில் விளையாட தமிழக வீரர்கள் நடராஜன் தங்கராசு, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிடன் சுந்தர் ஆகியோரு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் மற்றொரு வீரரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தியும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு உடல் காயத்தால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியா சென்றுள்ள கிரிக்கெட் அணியைப் பற்றியும் போட்டிகள் தொடர்பாகவும் செய்திகள் அப்டேட்டாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியில் kit ஸ்பான்ஸர் யார் என்பது தெரிய வந்திருக்கிறது.
MPL என்று அழைக்கப்படும் மொபைல் பிரீமியர் லீக் எனும் நிறுவனமே இந்திய கிரிக்கெட் அணியின் kit ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் இந்த உரிமை வரும் ஆஸ்திரேலியா போட்டியில் இருந்து தொடங்குகிறது.
பிசிசிஐ யின் பிரசிடண்ட்டும் முன்னாள் கிரிக்கெட்டருமான சவுரவ் கங்குலி கூறுகையில், வரும் மூன்றாண்டுகளுக்கு எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு kit ஸ்பான்ஸராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.