இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத்-லக்னோ அணிகள் மோதல்!

 
lsg

2025 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 6 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.  இப்போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் - ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள லக்னோ அணி, அசூர பலம் வாய்ந்த ஐதராபாத் அணியை எப்படி எதிர்கொள்ள போகிறது என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.