வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை? - ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்

 
Csk

இன்று இரவு நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இரவு 7.30 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் நடப்பு சீசனில் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. 
சென்னை அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் மும்பையுடன் விளையாடி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கடந்த வெள்ளி கிழமை நடைபெற்ற நிலையில், அதில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதேபோல் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் இரண்டு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.