ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய போட்டியில் டெல்லி-லக்னோ அணிகள் மோதல்

 
Ipl Ipl

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்றஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பல்லப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 
இந்த நிலையில், இன்று இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெல்லி அணியை பொறுத்தரவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.