இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை!

 
lsg vs dc

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

18வது சீசன் ஐபிஎல் கிர்க்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதுவரை 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. நேற்று இரவு நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 4வது லீக் போட்டியில் அக்‌ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்க முயற்சிக்கும். இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.