ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய போட்டியில் ராஜஸ்தான்-குஜராத் அணிகள் பலப்பரீட்சை

 
rrvsgt

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில், இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.  கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை தழுவியுள்ள அந்த அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. 

இதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 130 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆகையால் அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது.