ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய போட்டியில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதல்!

 
KKRvsSRH

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஏய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத்  அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3ல் வெற்றி, 5 தோல்வி என்று 6 புள்ளியுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்த ஐதராபாத் அணி அந்த வெற்றி பயணத்தை தொடர முனைப்பு காட்டி வருகிறது. 

இதேபோல் கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி எடுத்துள்ளது. எஞ்சிய 5 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஆகையால் கொல்கத்தா அணிக்கு இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.