ஐபிஎல் கிரிக்கெட் - ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

 
rr vs kkr

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 5வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவின. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.