சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் போட்டி - நாளை டிக்கெட் விற்பனை!

 
Csk

சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்குகிறது.

18வது சீசன் ஐபிஎல் கிர்க்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதுவரை 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. நேற்று இரவு நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. 
இந்த நிலையில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் லீக் போட்டி வருகிற 28ம் தேதி வெள்ளி கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.