விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேறுவது உறுதியானது- எங்கே தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடிபெயர்வது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆட்டக்காரராக விளங்கி வருபவர் விராட் கோலி. இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதேபோல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். கடைசியாக இந்திய அணி வென்ற டி20 உலக கோப்பை தொடரில் இறுதி போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வித்திட்டார். இருப்பினும் கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். இதனிடையே வீரர் விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடிபெயர உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடிபெயர்வது உறுதியாகியுள்ளது. அவர் குடும்பத்தினருடன் லண்டலில் செட்டில் ஆக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் உறுதிப் படுத்தியுள்ளார். விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேறுவது உண்மை தான் எனவும், அவர் அனுஷ்கா சர்மாவுடன் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது விராட் கோலியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


