2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்க அணிகள் இன்று மோதல்!

 
ausvssa

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் 4வது இடத்தை பிடித்த நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தன. நேற்று முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்ப்ரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு தொடரில் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருவதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி வருகிற 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணீயுடன் விளையாடும் என்பது குறிப்பிடதக்கது.