உலகக்கோப்பை கிரிக்கெட்- தனி ஆளாக ஆப்கானிஸ்தானை காலி செய்த மேக்ஸ்வெல்

 
கி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 39 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

கி

உலககோப்பையின் அரைஇறுதியில் தகுதி பெற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தானை சீரான இடைவெளியில் ரன்களை சேர்த்தது.


ஒருபுறம் இப்ராகிம் சர்டான் சிறப்பாக ஆடி ரன்களை சேர்க்க , மறுமுனையில் உள்ள பேட்ஸ்மேன்கள் 20,30 என தங்களால் முடிந்த பங்காளிப்பை அளித்து வந்தனர். சிறப்பாக ஆடிய இப்ராகிம் சர்டான் சதம் அடித்து அசத்தினார்.உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் வீரர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 129 ரன்கள் குவித்தார். இறுதி கட்டத்தில் வந்த ரசித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் விளாசி ஆப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்.50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது.

கி

292 என்ற கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும்,வார்னர் 18 ரன்னிலும்,மார்ஸ் 24 ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இருந்தனர். அடுத்து வந்த முக்கிய பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்த தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியாவை மேக்ஸ்வெல் தனி ஒரு ஆளாக மீட்டார்.அதிரடியாக ஆடிய அவர் 76 பந்துகளில் சதம் அடித்தார்.மேலும் அசத்திய அவர் 104 பந்துகளில் 150 ரன்களை கடந்தார்.128 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார்.


91 ரன்னுக்கு ஏழு விக்கெட் என்ற நிலையில் இருந்து ஒரே ஆளாக 200 அடித்து மிகப்பெரிய வெற்றியை பெற வைத்துள்ளார் மேக்ஸ்வெல்.உலக கோப்பையின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் களில் இதுவும் ஒன்று ரசிகர்கள் வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.