உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து-வங்கதேசம் இன்று மோதல்

 
NZ

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றை லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரண்டு வெற்றிகளுடன் நல்ல ரன்ரேட்டில் உள்ள தென் ஆப்ரிக்க அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி(2 வெற்றி) இரண்டாவது இடத்திலும், இந்திய அணி(2 வெற்றி) 3 வது இடத்திலும், பாகிஸ்தான் அணி(2 வெற்றி) 4வது இடத்திலும் உள்ளன.  இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என 5வது இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த 9வது இடத்தில் உள்ளது. 

ban

இந்த நிலையில், இன்று 11வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டும். இதேபோல் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள வங்கதேச அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 5வது இடத்திற்கு முன்னேறும்.