டிராவிஸ் ஹெட் சதம்...ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் - வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

 
INDvsAUS

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில்  3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் சேர்த்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் (0) சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேவிட் வார்னர் 60 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து  லபுஷேன் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தடுமாறியது. 

இந்த நிலையில், அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதம் விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 156 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோ தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.