உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடக்கம்!

 
INDvsAUS

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில், அதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எப்படியாவது வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி விட இந்திய வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரையில், பேட்டிங்கில் வலுவான நிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், விராட் கோலி, சுப்மன் கில், ரஹானே உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருந்தனர். 

இதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாராவும் அணியில் உள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதே உத்வேகத்தை டெஸ்ட் போட்டியிலும் காட்டினால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடலாம். இதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் சுழலில் மிரட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மாவின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த காயம் பெரிய அளவிலான காயம் இல்லை எனவும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.