ஆண் குழந்தைக்கு தந்தையானார் யுவராஜ் சிங்.. கொண்டாடும் ரசிகர்கள்!

 
யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்- ஹேசல் கீச் தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யுவராஜ் சிங்குக்கும் நடிகை ஹேசல் கீச்சுக்கும் 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்று முடிந்தது. யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசீர்வதித்துள்ளார். 

Yuvraj Singh-Hazel Keech welcome baby boy, granddad Yograj Singh wants to  take him to net practice right away | Entertainment News,The Indian Express

இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு நாங்கள் வரவேற்கும் இவ்வேளையில் எங்கள் பிரைவசி வாழ்க்கைக்கும் நீங்கள் மதிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 


இந்திய அணியின் பிரதான ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளின் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர். வழக்கம் போல அனைத்து கிரிக்கெட் வீரர்கள் ஃபார்மை இழந்து அணியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். அந்த நிலை யுவராஜ் சிங்குக்கும் ஏற்பட்டது. இடையே புற்றுநோயும் அவரது கரியரை காலி செய்தது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல்  2019ஆம் ஆண்டு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.