இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல் சாதனை...

 
அஜாஸ் படேல்

இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  பேட்டிங்கை தேர்வு செய்தார்.  முதல் நாள் முடிவில் இந்திய அணி 70 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.  நியூசிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். முதல் நாள் ஆட்டத்தில்,  மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும்,  சாஹா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ajaz patel

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய உடன் மீண்டும் ஒரே ஓவரில் சஹா மற்றும் அஸ்வினை வீழ்த்தி   2 விக்கெட்டுகளை எடுத்தார்.  இதனால் 224 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது.  பின்னர் களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல், மயங்க் அகர்வால் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  உணவு இடைவேளைக்குப் பிறகு மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்திருந்தபோது, அஜாஸ் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் . அடுத்து  52 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேலும் அஜாஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். 

இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில்,  8 விக்கெட்டுகள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் அஜாஸ் படேல். அடுத்ததாக ஜெயந்த் யாதவ் 12 ரன்களில்  ஆட்டமிழக்க  ஆட்டம் சூடுபிடித்தது.  9 விக்கெட்டுகளை எடுத்ததால் ஒரே இன்னிங்ஸில் 10  விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைப்பார் என எதிர்ப்பார்த்த சூழலில் , சிராஜ் 4 ரன்களிலேயே அஜாஸ் படேலின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

ajaz patel

இதன்மூலம் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனை பட்டியலில் அஜாஸ் பட்டேலும் இடம்பிடித்தார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் ஜிம் லேகர் மற்று ம் அனில் கும்ப்ளே ஆகிய இருவர் மட்டுமே. தற்போது பத்து விக்கெட்டுகளையும் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.  படைத்துள்ளார்