• May
    21
    Tuesday

Main Area

Main



10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை: கோட்டைவிட்ட இலங்கை அரசு; முப்படை தளபதிகள் அதிரடி மாற்றம்?

 மைத்ரிபால சிறிசேன
மைத்ரிபால சிறிசேன
Loading...

கொழும்பு: இலங்கையில் முப்படை தளபதிகளை மாற்றம் செய்யவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 

srilanka

இலங்கையின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்று கிழமை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும்  வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 300ற்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகினர். 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த கொடூர தாக்குதல் குறித்து பத்து நாட்களுக்கு முன்பே  உளவுத்துறை எச்சரித்திருந்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என செய்திகள் வெளியாகியிருந்தன.

srilanka

இந்த  தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே  சந்தேகம் தெரிவித்துள்ளார். 

srilanka

இந்நிலையில்,  தாக்குதல் சம்பவம் தொடர்பாக மக்களிடம் நேற்று உரையாடிய அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேன, குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து உளவுத்துறையின் எச்சரிக்கை எனக்கு வந்து சேரவில்லை. இது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. அதனால் வரும் வாரங்களில் காவல்துறை, பாதுகாப்புப் படை முழுமையாக மறுசீரமைக்கப்படும். மேலும் 24 மணி நேரத்தில் முப்படை தளபதிகளையும் மாற்ற உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்தார். 

இதையும் வாசிக்க: இஸ்லாமியர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்; என்ன நடக்கிறது இலங்கையில்?!...

2018 TopTamilNews. All rights reserved.