• October
    17
    Thursday

Main Area

Main



குண்டுவெடிப்பு எதிரொலி; இலங்கையில் 108 இந்தியர்கள் கைது!

கோப்புப்படம்
கோப்புப்படம்

கொழும்பு: குண்டுவெடிப்பு எதிரொலியாக, விதிமுறைகளை மீறி தங்கியதாக இந்தியர்கள் 108 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

srilanka

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

srilanka

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலின் பதற்றம் படிப்படியாக குறைந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே, குண்டு வெடிப்பு தொடர்பாக பல்வேறு விசாரணைகளையும், சோதனைகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், விதிமுறைகளை மீறி தங்கியதாக இந்தியர்கள் 108 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்று, அந்நாட்டு விதிமுறைகளை மீறி தங்கியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் 42 பேர் விசா முடிவடைந்த நிலையில், இலங்கையில் தங்கி தொழில்புரிந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

arrest

முன்னதாக, எனது நாட்டை தனியாக விட்டு விடுங்கள் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உருக்கமாக கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மூளையாக செயல்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

2018 TopTamilNews. All rights reserved.