• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடக்கம் 

srirangam

ஸ்ரீரங்கம் :

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்ததாகும்.

srirangam

லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கவிசக்கரவர்த்தி கம்பர்,கம்பர் இராமாயனத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் என்பது வரலாற்று கூற்று ஆகும்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவது உண்டு. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நாளை திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

srirangam

நாளை மறுநாள் முதல் பகல் பத்து நிகழ்ச்சி தொடங்குகிறது. அதனையடுத்து நாளை மறுநாள் காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்து சேர்ந்தடைகிறார். அதனை தொடர்ந்து காலை 8.15 மணி முதல் பகல் 1 மணி வரை பொது ஜன சேவையுடன் அரையர் சேவை நடைபெறும்.

அதனையடுத்து விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார். வருகிற 17 ஆம் தேதி பகல் பத்தாம் நிகழ்ச்சியில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

srirangam

விழாவில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 18-ந் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு சொர்க்க வாசலை அதிகாலை 5.30 மணிக்கு கடக்கிறார். பின்னர் திருக்கொட்டகையில் பக்தர்களுக்கு மத்தியில் எழுந்தருளுவார். ஆயிரங்கால் மண்டபத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 

விழாவையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழாவிற்காக ஆயிரங்கால் மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றனர்.
 

             
2018 TopTamilNews. All rights reserved.