• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

மேகதாது அணை தீர்மானம் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இல்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

mk stalin

சென்னை: மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாட்டு ராசி மணலில் அணைக்கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்யக் கோரி திருச்சியில் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. அதில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தீர்மானமானது மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இல்லை என்றும், இருப்பினும் டெல்டா மக்கள் நலனுக்காகத் தீர்மானத்தை ஆதரித்ததாக ஸ்டாலின் கூறினார்.

பின்னர் பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாகத் தெரிவித்தார்.

             
2018 TopTamilNews. All rights reserved.