• July
    20
    Saturday

Main Area

Main



'ஒழுங்காக என்னை திருமணம் செய்து கொள்' : பிரபல நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞர்!? பகீர் ரிப்போர்ட்!?

நடிகை  ரிது சிங்
நடிகை  ரிது சிங்
Loading...

உத்தரபிரதேசம்:  பிரபல நடிகை ஒருவர் தங்கியிருந்த அறையில் புகுந்த மர்மநபர் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல போஜ்புரி நடிகை ரிது சிங். இவர் தற்போது  நடித்து வரும் ‘துவாரி பிடியா’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக உத்தர பிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கன்ச் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். 

ritu

இந்நிலையில் நடிகை  ரிது சிங் அறைக்குள் நுழைந்த ஜான்பூரை சேர்ந்த பங்கஜ் என்ற இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன்ற ரிது  சிங், கத்தி கூச்சலிட, அங்கு அசோக் என்பவர் வந்துள்ளார். ஆனால் அசோக்கை பங்கஜ் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது கையில் குண்டு பாய்ந்தது. 

ritu

இதையடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு வந்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரை துப்பாக்கியை கீழே போட சொல்லி கூறினர். ஆனால் அந்த இளைஞர் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை  அடுத்து படப்பிடிப்பை ரத்து செய்த நடிகை  ரிது சிங் சொந்த ஊருக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.  
 

2018 TopTamilNews. All rights reserved.