• January
    21
    Monday

Main Area

Main

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்

tn
Loading...

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. சுமார் 13 உயிர்களை காவு வாங்கிய அந்த போராட்டத்துக்கு பின்னர், ஆலைக்கு சீல் வைத்து மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கியதோடு, சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதி வழங்கியது. 

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஆலைக்குள் செல்ல அனுமதி தேவை என்றும் தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. 

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை வழங்குமாறு தமிழக தலைமை வழக்கறிஞரிடம் சுற்றுச்சூழல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.