• March
    24
    Sunday

Main Area

Main



சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சீமான்
சீமான்
Loading...

 புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு  கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல்:

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிகள் பிரிப்பது மற்றும் வெற்றி பெறுதற்கான திட்டம் வகுப்பது என அத்தனை கட்சிகளும் பிஸியாக இருக்கிறது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பல இடங்களில் பணம், பொருட்கள் பறிமுதல் வருகின்றன. இதற்கிடையே அங்கீகாரம் கிடைக்காத சில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

sugar farmer ttn

 

கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு:

இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இதே சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது. சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சிக்கு, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கீடு செய்ய கேட்கப்பட்ட நிலையில், அச்சின்னம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

kamal ttn
பேட்டரி டார்ச் லைட் சின்னம்:

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டிருந்த மோதிரம் வழங்கப்படவில்லை என்பதும்   கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி  டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.