• October
    17
    Thursday

Main Area

Main



சுக்குமல்லி குழம்பு

சுக்குமல்லி குழம்பு
சுக்குமல்லி குழம்பு

என்ன தான் நாம் பார்த்து பார்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக சமைத்துக் கொடுத்தாலும், வெளியில் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியில் குழந்தைகளும், அலுவலகத்தில் கணவரும் எதையாவது சாப்பிட்டு விடுகிறார்கள். தவிர, சமயங்களில் துரித உணவுகளும், ஹோட்டல் சாப்பாடும் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. ஃபுட் பாய்சன் என்பதெல்லாம் மாசத்துக்கு ஒரு தடவை எல்லோருக்கும் வருகிற சராசரி பிரச்சினையாகவே ஆகிவிட்ட இன்றைய காலத்தில் வாரம் ஒரு முறையாவது சுக்குமல்லி குழம்பு வைத்து பரிமாறுங்கள். 

sukku mali

தேவையான பொருட்கள்
சின்னவெங்காயம்       -100கிராம்
பூண்டு                  -10பல்
புளி                           -சிறு எலுமிச்சை அளவு
கடலைப்பருப்பு           -4டீஸ்பூன்
வெந்தயம்               -1/2டீஸ்பூன்
மிளகு                   -1/4டீஸ்பூன்
கடுகு                   -1/4டீஸ்பூன்
சீரகம்                   -1/4டீஸ்பூன்
சுக்கு மல்லி பொடி -1டீஸ்பூன்
மிளகாய் தூள்                  -1டீஸ்பூன்
பெருங்காயத்தூள்         -1சிட்டிகை
நல்லெண்ணெய்          -2குழிக்கரண்டி
கறிவேப்பிலை           -1ஆர்க்கு
உப்பு                          -தேவையான அளவு

sukku mali

செய்முறை
கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை  வெறும் வாணலியில் நன்றாக வறுத்து அரைத்து கொள்ள வேண்டும். புளியை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 2டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு , சீரகம் தாளித்து  வெங்காயம், பூண்டு போட்டு வதக்க வேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் போட்டு வதக்கி புளித்தண்ணீரை ஊற்றி, பொடித்து வைத்த பொடியையும் , சுக்கு மல்லி பொடியையும் சேர்க்க வேண்டும். கொதித்தவுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும். இந்த சுக்கு மல்லி குழம்பு ஜீரண சக்தியை நன்கு தூண்டக் கூடியதால், ஜீரண உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்படத் துவங்கும்.

2018 TopTamilNews. All rights reserved.