• July
    22
    Monday

Main Area

Main



சூப்பர் சிங்கரில் வாக்கெடுப்பில் முதலிடம்; வாங்கியதோ மூன்றாவது பரிசு: கடுப்பான பூவையார் ரசிகர்கள்?!

பூவையார்
பூவையார்
Loading...

சென்னை:  'சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. 

povaiyar

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் என்ற  ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ தொடங்கியது. தொடர்ந்து  முதற்கட்டமாக  21 பேரிலிருந்து ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார் என 4 பேர் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும்  வைல்ட் கார்ட் சுற்று மூலம் சூர்யா மற்றும் அஹானா இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

super singers

இந்நிலையில் பல வாரங்களைக் கடந்த இந்த நிகழ்ச்சி நேற்று இறுதி கட்டத்தை எட்டியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று மாலை  கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடந்தது. இதில்  பிரபல பின்னணிப் பாடகர்களான ஷங்கர் மஹாதேவன், சித்ரா, எஸ்.பி.பி.சரண், கல்பனா ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ரித்திக் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இதை  தொடர்ந்து இரண்டவது இடத்தை பிடித்த  சூர்யாவுக்கு  25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளும், மூன்றாமிடம் பெற்ற பூவையாருக்கு, 10 லட்ச ரூபாயும்  பரிசாக வழங்கப்பட்டது.

 

வாக்குகள் அடிப்படையில் தான், வெற்றியாளர்  தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வழக்கமாக இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் அறிவிக்கப்படும். அதன்படி பார்த்தால் இம்முறை வெற்றியாளராக வரவேண்டியவர் பூவையார் தான்.இதனால் கடுப்பான பூவையார் ரசிகர்கள்,  பூவையாருக்கு தான் அதிகமாக ஓட்டு விழுந்துள்ளது. இது ஏமாற்று வேலை என்று வலைதளவாசிகள் விஜய் டிவியை  வசைபாடி வருகின்றனர். 

இதை வாசிக்க: மக்கள் செல்வனுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த கமலின் மகள்! 

2018 TopTamilNews. All rights reserved.