• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

புதுச்சேரி 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

supreme court


டெல்லி: புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு அம்மாநில ஆளுநர் கிரண்பேடி பரிந்துரையின் பேரில் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய பாஜகவினர் மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்களுக்கு கிரண்பேடி பதவி பிராமணம் செய்து வைத்தார். ஆனால் எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லாது என அம்மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டு சட்டசபைக்குள் அவர்கள் நுழையவும் தடை விதித்திருந்தார். இதனையடுத்து அவர்கள் சட்டசபைக்கு முன் போராட்டமும் நடத்தினர்.

ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார் எனக்கூறி அவர்களது பதவி பிரமாணத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் என  உத்தரவிட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக காங்கிரஸ் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களுக்கான அதிகாரங்களையும், சலுகைகளையும் உறுதி செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

             
2018 TopTamilNews. All rights reserved.