• July
    18
    Thursday

Main Area

Main



கோவா புதிய முதல்வராக பதவியேற்கிறார் பிரமோத் சாவந்த்!

பிரமோத் சாவந்த் (கோப்புப்படம்)
பிரமோத் சாவந்த் (கோப்புப்படம்)
Loading...

பனாஜி: கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 40 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்தலில், காங்கிரஸ் 17 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 13 தொகுதிகளில் வென்ற பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதால், அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். தொடர்ந்து, கோவாவில் கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்றார்.

தலா 3 இடங்களில் வென்ற மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி(எம்ஜிபி), கோவா பார்வேர்ட் கட்சி(ஜிஎப்பி), 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்த போது, மனோகர் பாரிக்கர் முதல்வராக வந்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என்று கூட்டணி கட்சிகள் நிபந்தனை விதித்தன.

இந்நிலையில், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற்று முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கோவா சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பலம் 36-ஆக குறைந்தது. கடந்த மாதம் எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா காலமானார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் ராஜினாமா செய்துவிட்டனர். முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று காலமானார். தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

அதேசமயம், பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வ்வி எழுந்தது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக கூட்டணி எம்எல்ஏ-க்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது. இதனிடையே, பாஜக-வுக்கு பெரும்பான்மை இல்லாததால் தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், கோவா மாநிலத்தின் அடுத்த முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று இரவு 11 மணிக்கு பதவி ஏற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வை சேர்ந்த இவர் கோவா சட்டப்பேரவையின் சபாநாயகர் ஆவார்.

2018 TopTamilNews. All rights reserved.